இது சரி வராது...இவரை டீமை விட்டு தூக்கி அவரை இறக்குங்க கொந்தளித்த சிஎஸ்கே ரசிகர்கள்!

Chennai Super Kings Sunrisers Hyderabad Suresh Raina Ajinkya Rahane
By Swetha Apr 29, 2024 08:24 AM GMT
Report

2024 ஐபிஎல் தொடரில் அஜின்க்யா ரஹானே தொடர் தடுமாற்றத்துடன் ஆடி வருகிறார். 

இது சரி வராது

நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சேப்பாக்கத்தில் சிஎஸ்கே - சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையான போட்டி நடந்தது. இதில் சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டிய டேரில் மிட்செல் 52, ருதுராஜ் கெய்க்வாட் 98, சிவம் துபே 39 ரன்கள் குவித்து 20 ஓவர்களில் 212 ரன்கள் சேர்த்தனர். இந்த இலக்கை சேஸ் செய்ய முடியாமல் சன்ரைசர்ஸ் அணி படுத்தோல்வி அடைந்தது.

இது சரி வராது...இவரை டீமை விட்டு தூக்கி அவரை இறக்குங்க கொந்தளித்த சிஎஸ்கே ரசிகர்கள்! | Ajinkya Rahane Should Be Dropped

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அஜின்க்யா ரஹானே 2024 ஐபிஎல் தொடரில் படுமோசமாக ஆடி வருகிறார். இந்த போட்டியில் அவர் 12 பந்துகளில் வெறும் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தோனி சீக்கிரம் விளையாடி முடிங்க..குழந்தை பிறக்கப் போகுது - சாக்ஷி சொன்ன ஹாப்பி நியூஸ்!

தோனி சீக்கிரம் விளையாடி முடிங்க..குழந்தை பிறக்கப் போகுது - சாக்ஷி சொன்ன ஹாப்பி நியூஸ்!

சிஎஸ்கே ரசிகர்கள்

போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருந்தாலும், 230 ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் 212 ரன்கள் மட்டுமே எடுத்ததாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். ரஹானே துவக்க வீரராக இறங்கி 12 பந்துகளை வீணடித்ததே காரணம் என கூறி வருகின்றனர்.  

இது சரி வராது...இவரை டீமை விட்டு தூக்கி அவரை இறக்குங்க கொந்தளித்த சிஎஸ்கே ரசிகர்கள்! | Ajinkya Rahane Should Be Dropped

இந்த சீசனில் விளையாடிய அஜின்க்யா ரஹானே இதுவரை 9 போட்டிகளில் 170 ரன்கள் மட்டுமே குவித்து ஸ்ட்ரைக் ரேட் 123 ஆக உள்ளது. பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் மட்டுமே பேட்டிங் செய்து வரும் அஜின்க்யா ரஹானே குறைவான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது டி20 போட்டிகளில் நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு விஷயம்.

இதனையடுத்து, பலரும் அஜின்க்யா ரஹானேவை சிஎஸ்கே அணியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சுரேஷ் ரெய்னாவை சுட்டிக் காட்டி தற்போது ஓய்வு பெற்று விட்ட போதும் அவருக்கு இன்னும் ஓய்வு பெறும் வயது வரவில்லை என பலரும் கூறி வரும் நிலையில் ரஹானேவை நீக்கி விட்டு ரெய்னாவை சிஎஸ்கே அணியில் சேர்த்தால் கூட அதிக ரன் கிடைக்கும் என்று தீவிர சிஎஸ்கே ரசிகர்கள் வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.