சபரிமலை பக்தர்களே.. மாலை போடும்போது இந்த விரதமுறைகளை கடைபிடிப்பது அவசியம்!
சபரிமலை ஐயப்ப சாமிகள் என்னென்ன விரத முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என பார்க்கலாம்.
சபரிமலை
கார்திக்கை மாதம் மாலை அணிந்து பக்தர்கள் விரதமிருந்து கேரளாவில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் செல்லும் வழக்கம் பெரும்பாலானோர் செய்வதுண்டு. சபரிமலைக்கு மலையேறி செல்ல,
கரடுமுரடான பாதைகளைக் கடப்பது மட்டுமல்லாமல்,உணவு உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் எளிமையாக இருக்க வேண்டும். இந்த மண்டலபருவத்தில் கடைப்பிடிக்கப்படும் சமையல் பழக்கவழக்கங்கள் ஐயப்பன் மீதான பக்தியை பிரதிபலிக்கிறது.
இந்த விரதத்தில் இருக்கும் பக்தர்கள் தூய்மை மற்றும் கட்டுப்பாட்டின் மீது கவனம் செலுத்துவது அவசியம். இதன் மூலம் பக்தர்கள் புனித பயணத்திற்கு தயார் படுத்து கொள்கின்றனர்.
தவப்பயணம்
மண்டல விரதம் என்பது தூய்மையான உடலையும் மனதையும் கொண்ட சுத்தமான உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துவதாகும். எனவே பக்தி உணர்வோடு உணவுக் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, விபூதி பூசி, ‘சுவாமியே சரணமய்யப்பா’ என்று துதிப்பாடியப் பிறகே காலை உணவை உண்ண வேண்டும். மண்டல விரதம் முழுவதும்,
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அரிசி உணவு எடுத்துகொள்ளலாம். மதுபானம், வெற்றிலை, பான் உள்ளிட்ட போதைப்பொருள்களை தவிர்க்க வேண்டும்.
அரவணா பிரசாதம்
ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் பக்தர்கள் மதிப்புமிக்க அரவணைப் பாயசத்தை பிரசாதமாக பெற்றுக் கொள்கிறார்கள். ஐயப்பனை தரிசனம் செய்ததன் புண்ணியத்தை தங்களது அன்பானவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அரவணா பிரசாதம் பழுப்பு அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வெல்லம் கொண்டு மெதுவாக சமைத்து நான்கு மடங்கு தண்ணீரில் கொதிக்கவைக்கப்படுகிறது.
இந்த பழுப்பு அரிசியைத்தான் ஒரு காலத்தில் பக்தர்கள் தங்கள் புனித பயணத்தின் போது தங்களுடன் எடுத்துச் சென்றனர். மண்டல பருவத்தில் வழங்கப்படும் மற்றொரு உணவு பாரம்பரியம் ‘புழுக்கு’ என என்று அழைக்கப்படுகிறது.
கப்பா புழுக்கு
இது ஒரு பாரம்பரிய உண்வாகும். மரவள்ளிக்கிழங்கு, பச்சைப்பயறு மற்றும் பச்சை வாழைக்காய் பயன்படுத்தி செய்யப்படுகிறது. பச்சைப் பயிரை மூன்று முதல் நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மென்மையானவுடன், பச்சை வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து,
ஒரு டீஸ்பூன் மஞ்சள், ஒரு சிட்டிகை மிளகாய் தூள் மற்றும் சுவைக்கு உப்பு சேர்த்து சமைக்கவும். ஒரு பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து தனியாக சமைக்கவும்.
பின்னர் அதை பச்சைப்பயறு மற்றும் வாழைப்பழ கலவையில் சேர்க்கவும். கூடுதல் சுவைக்காக பச்சை மிளகாயுடன் வெங்காயம் அரைத்து சேர்க்கவும். கடைசியாக அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் சில துளி தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
சக்கை புழுக்கு
இந்த உணவு பலாப்பழம் மற்றும் அதன் விதைகள் வைத்து செய்யப்படுகிறது. ஒரு சிட்டிகை உப்புடன் சமைத்து, அவை மென்மையாக இருக்கும்போது பாத்திரத்தில் சிறிது அதிகமாக தண்ணீர் இருக்க வேண்டும் அடுத்து,
தேங்காய், சீரகம், பூண்டு ஆகியவை சேர்ந்து ஒன்றாக அரைத்து நன்றாக கலக்க வேண்டும். பச்சை வாசம் போனதும், அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் சில துளிகள் தேங்காய் எண்ணெயை சேர்ந்து கலக்கவும்.