நடிகர் ரஜினிகாந்த் செய்த செயல்; மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?

Dhanush Tamil Cinema Aishwarya Rajinikanth Gossip Today
By Sumathi Mar 28, 2024 05:30 PM GMT
Report

தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் - ஐஸ்வர்யா

காதலித்து திருமணம் செய்துக்கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

dhanush - aishwarya rajinikanth

அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர். ஆனால், அவ்வப்போது தனுஷின் பட விழாக்களில் யாத்ரா, லிங்கா கலந்துக்கொள்வார்கள்.

தனுஷ் தான் அதற்கு முழு காரணமே.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளீச்!

தனுஷ் தான் அதற்கு முழு காரணமே.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளீச்!

ரஜினிகாந்த் முயற்சி

ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். மேலும் பல படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் செய்த செயல்; மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா? | Aishwarya Rajnikanth Reunite With Dhanush For Sons

இந்நிலையில், மகள் மருமகனை ஒன்று சேர்க்க ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முயற்சி செய்து, தற்போது அவர்கள் மகன்களுக்காக மீண்டும் ஒன்றுசேர முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.