தனுஷ் தான் அதற்கு முழு காரணமே.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளீச்!
3 படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த தகவல் கவனம் பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக, தனுஷ் பாடிய கொலைவெறி பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை முக்கிய கதாப்பாத்திரமாக லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.
அந்த திரைப்படம் அண்மையில்தான் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “சில விஷயங்கள் நடக்க வேண்டும் என்றால் நாம் அதற்கு தயாராகவே முடியாது. அப்படி தான் கொலவெறி பாடல் எங்களுக்கு அமைந்தது.
கொலவெறி பாடல்
3 படத்திற்கு அது ஒரு சவாலாக மாறிவிட்டது. என்னை பொறுத்த வரை அது ஒரு ஆச்சர்யம் என்பதை விட அதிர்ச்சி தான். ஏனெனில் அந்த படம் மூலம் நான் சொல்ல வந்தது வேறு, ஆனால் அந்த பாடல் படத்தை முழுவதுமாக விழுங்கிவிட்டது. கொலைவெறி பாடல் லீக் ஆனதால் அது நான் சொல்ல வந்ததை முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை.
ஏனென்றால் கதைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தை நான் எடுத்துக்கொண்டிருக்கும்போது, அதன் ரிலீசின் போது கூட யாரும் அதைப் பற்றி பேசவில்லை. ஆனால் ரீ-சிலீஸ் ஆகும்போது பலரும் எனக்கு போன் செய்து பாராட்டுகின்றனர். திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது கிடைக்காத அங்கீகாரம் இப்போதுதான் கிடைக்கிறது.
காரணம் கொலவெறி பாடல் திரைப்படத்தை மறைத்துவிட்டது.
அந்த பாடல் திரைப்படத்திற்கு உதவியதா என்றால் இல்லை, ஆனால் அது நிறைய பேரின் வாழ்கைக்கு உதவியது என்றால் நல்ல விஷயம் தான் எனத் தெரிவித்துள்ளார்.

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

விடுதலைப்புலிகளின் பணத்திற்கு என்ன நடந்தது..! கே. பி - கோட்டா டீல்: அம்பலப்படுத்தும் பொன்சேகா IBC Tamil
