நடிகர் ரஜினிகாந்த் செய்த செயல்; மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?
தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் - ஐஸ்வர்யா
காதலித்து திருமணம் செய்துக்கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர். ஆனால், அவ்வப்போது தனுஷின் பட விழாக்களில் யாத்ரா, லிங்கா கலந்துக்கொள்வார்கள்.
ரஜினிகாந்த் முயற்சி
ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். மேலும் பல படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக உள்ளார்.

இந்நிலையில், மகள் மருமகனை ஒன்று சேர்க்க ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முயற்சி செய்து, தற்போது அவர்கள் மகன்களுக்காக மீண்டும் ஒன்றுசேர முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil