மீண்டும் தனுஷுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Dhanush Aishwarya Rajinikanth
By Sumathi Feb 09, 2024 05:30 PM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்தும், தனுஷும் மீண்டும் சேர்ந்து வாழப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐஸ்வர்யா-தனுஷ்

காதலித்து திருமணம் செய்துக்கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். அதன்பின் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் தாய் ஐஸ்வர்யாவுடன் உள்ளனர்.

dhnaush - aishwarya

ஆனால், அவ்வப்போது தனுஷின் பட விழாக்களில் யாத்ரா, லிங்கா கலந்துக்கொள்வார்கள். ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளியா? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளியா? வெளியான அதிர்ச்சி தகவல்!

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில், லால் சலாம் ட்ரெய்லரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ரஜினி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழப்போவதாக எதிர்பார்க்கின்றனர்.

மீண்டும் தனுஷுடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Aishwarya Rajinikanth To Reunite With Dhanush

பிரிந்து வாழ்ந்தாலும் மகன்கள் விஷயத்தில் இருவரும் கலந்து பேசி தான் முடிவு எடுக்கிறார்கள். மேலும், இருவரும் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இருவருக்குமே இல்லையாம்.