கனிமொழிக்கூட இப்படி ஒரு உறவா..? ரகசியம் உடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
அரசியல் வாரிசு ஒருவருடனான தனது நட்பு குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா
தனுஷ் ஐஸ்வர்யா நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாட்டால் தங்களது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் அறிவித்தனர். இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அரசியல் வாரிசுடன் தனக்கு 20 வருட நட்பு இருப்பதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அது வேறு யாருமில்லை கனிமொழி தான்.
விவரிக்க முடியா..
ஐபிசி தமிழ் யூடியூப் சேனலில் கனிமொழி அரசியல் பயணத்தை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவருடனான நட்பு பற்றி முதன்முறையாக பேசி இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, “பொதுவாக நான் எங்குமே செல்லமாட்டேன். ஆனால் கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் வந்துவிடுவேன். எங்களுடையது 20 வருட நட்பு. எங்களுடையது விவரிக்க முடியாத ஒரு உறவு.
நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் நான் முதலில் போன் பண்ணி பேசுவது அக்காவிடம் தான். அரசியல் மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவர் பேசியதை பார்த்து நிறைய திட்டி இருக்கிறேன்.
உறவு
இன்னும் நல்லா பேசனும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன். எனக்கு நட்பு வட்டாரம் ரொம்ப கம்மி. அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த நட்பு வாட்டாரத்தில் ஒருவர் தான் கனிமொழி அக்கா. அவங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
ஆனால் என்னுடைய கோவில் வழிகாட்டி அவங்க தான். நான் எந்த ஊருக்கு, எந்த கோவிலுக்கு போனாலும் அக்காவின் ஆளுங்க தான் என்னை பத்திரமா கூட்டிட்டு போவாங்க. அக்கா என்னுடைய எந்த படமும் பார்த்ததில்லை.
ஆனால் அவங்களுக்கு கமர்ஷியல் படங்கள் ரொம்ப பிடிக்கும். பார்க்க தான் அவங்க சீரியஸ் ஆன ஆள் மாதிரி இருப்பாங்க. அவங்க சிரிச்சா அவ்வளவு அழகா இருக்கும். ஆனால் சிரிக்க மாட்டாங்க. அவங்க இன்னும் நிறைய சிரிக்க வேண்டும். எப்பவுமே சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என ஆசைப்படுவதாக கூறியுள்ளா