Tuesday, Jun 24, 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் யாரையும் காதலிக்கவில்லை - வெளியான புதிய தகவல்..!

Dhanush Aishwarya Rajinikanth Marriage Divorce
By Thahir 2 years ago
Report

பிரபல இளம் நடிகர் ஒருவரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அது பொய்யான செய்தி என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

காதல் திருமணம் - பிரிவு 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Aishwarya Rajinikanth is not in love with anyone

18 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென பிரிவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இருவரும் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்கள் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.அதே போல ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

இரண்டாம் திருமணமா?

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானது. பிரபல இளம் நடிகரை ஐஸ்வர்யா காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த இளம் நடிகர் யார் என்று இதுவரை எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2 ஆம் திருமணம் செய்து கொள்ள போவதில்லையாம். மேலும் அவர் இளம் நடிகரை காதலிப்பதாக வெளியான தகவல்களும் தவறானவை என தகவல் வெளியாகியுள்ளது.

Aishwarya Rajinikanth is not in love with anyone

2வது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லை என்றும், அவர் தற்போது தனது முழுகவனத்தையும் திரைப்பட தயாரிப்பில் செலுத்தி வருகிறாராம்.

கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு 2 வது திருமணம் என்று செய்திகள் பரவி நிலையில் அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.