பிரபல இளம் நடிகரை 2-ஆம் திருமணம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
பிரபல இளம் நடிகர் ஒருவரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
காதல் திருமணம் - பிரிவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
18 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீரென பிரிவதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இருவரும் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்கள் கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.அதே போல ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.
இரண்டாம் திருமணமா?
இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இளம் நடிகரை ஐஸ்வர்யா காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இளம் நடிகர் யார் என்று இதுவரை எந்த தகவலும் இல்லை. சென்னையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தனது காதலனுடன் ஐஸ்வர்யா இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.
You May Like This Video