2வது திருமணம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - இந்த இயக்குனர் தான் மாப்பிள்ளையா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2வது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தமிழில் 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதில் தனுஷ், ஸ்ருதிஹாசன் லீட் ரோலில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும் இளைஞர்களை கவர்ந்தது.

இந்நிலையில் அதன்பின், சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
2வது திருமணம்?
தற்போது மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அண்மையில் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல கோர்ட்டில் முறையாக விவாகரத்து கேட்டு மனு அளித்திருக்கிறார்கள். இந்நிலையில், துணை இயக்குனர் ஒருவரை ஐஸ்வர்யா 2வது திருமணம் செய்யவுள்ளதாகவும், இருவரும் நெருக்கமாக பழகி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.
இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வதந்தியாக இருக்கவே வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan