அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. எந்த விதத்திலும் உதவல - ஐஸ்வர்யா ரஜினி வேதனை!
3 திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'லால் சலாம்' திரைப்படம் உருவாகியுள்ளது. ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் நெற்றி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில், 3 திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் குறித்து பேசியுள்ளார்.
அழுத்தம் கொடுத்தது
அவர் பேசியதாவது "ஒய் திஸ் கொலவெறி பாடல் அவ்வளவு பெரிய ஹிட் ஆனது எங்களுக்கே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அந்தப் பாடல் படத்தின் மீது அதீதமான அழுத்தத்தை கொடுத்துவிட்டது.

அந்தப் பாடல் 3 படத்தை விழுங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை ஓவர் ஷேடோ செய்துவிட்டது. முக்கியமாக இந்தப் பாட்டு படத்தின் போக்கையே மாற்றிவிட்டதால் எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. அந்தப் பாடல் படத்தின் வெற்றிக்கு எந்தவிதத்திலும் உதவி செய்யவில்லை” என்று பேசியுள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil