விஜய் சின்னப்பையன்...பட வாய்ப்பை மறுத்த ஐஸ்வர்யா ராய்? வெளிவந்த தகவல்
இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகையான ஐஸ்வர்யா ராய் விஜயுடன் கிடைத்த வாய்ப்பு ஒன்றை மறுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஐஸ்வர்யா ராய்
உலக அழகியான ஐஸ்வர்யா ராய், தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வந்த "இருவர்" படத்தின் மூலம் படங்களில் அறிமுகமாகினார்.
அதனை தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினி - அஜித் படங்களில் நடித்த ஐஸ்வர்யா தமிழில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
சின்னப்பையன்..
இது தொடர்பான தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் "தமிழன்" படத்தில் நாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். ஆனால், இப்படத்தில் நடிக்க முதலில் ஐஸ்வர்யா ராயிடம் தான் கேட்கப்பட்டதாம்.
ஆனால், அப்போது ஐஸ்வர்யா ராய் விஜய் ரொம்ப சின்னப்பையன் சார், அஜித் மாதிரியான நடிகர்கள் யாரவது இருந்தால் சொல்லுங்கள் என கூறி தமிழன் பட வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம் என்ற தகவலும் உள்ளது.