ஐஸ்வர்யா ராய்க்கு அறுவை சிகிச்சை - என்னாச்சு?

Aishwarya Rai Tamil Cinema
By Sumathi May 20, 2024 09:00 AM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வலது கையில் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

ஐஸ்வர்யா ராய்

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

aishwarya rai

இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

ஹனிமூன் போயிருந்த போது நடந்த அந்த சம்பவம் - ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

ஹனிமூன் போயிருந்த போது நடந்த அந்த சம்பவம் - ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

அறுவை சிகிச்சை

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு துணையாக மகள் ஆராத்யா சென்றார்.

ஐஸ்வர்யா ராய்க்கு அறுவை சிகிச்சை - என்னாச்சு? | Aishwarya Rai Bachchan To Undergo Surgery

முன்னதாக, மும்பை விமான நிலையத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராய் கையில் கட்டு இருந்தது. கேன்ஸிலும் அந்த கட்டுடன் தான் சிவப்புக் கம்பளத்தில் நடந்தார்.

இந்நிலையில், அவரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் அவருக்கு கையில் அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.