மாமியார் டார்ச்சர்; கணவருடன் விவாகரத்து? புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்!

Aishwarya Rai Bollywood Abhishek Bachchan
By Sumathi Feb 06, 2024 02:30 PM GMT
Report

தனது விவாகரத்து வதந்திக்கு ஐஸ்வர்யா ராய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகை ஜஸ்வர்யா ராய்

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான இவர், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

aishwarya rai - abhishek bachchan

இவர்களுக்கு கடந்த 2011ல் ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே அவர்கள் இரண்டு பேருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும்,

கணவருடன் உறவில் அந்த நேரத்தில் அதுதான் பிடிக்கும் - ஓப்பனா பேசிய ஐஸ்வர்யா ராய்!

கணவருடன் உறவில் அந்த நேரத்தில் அதுதான் பிடிக்கும் - ஓப்பனா பேசிய ஐஸ்வர்யா ராய்!

விவாகரத்து?

அதனால்தான் அவர் அணிவித்த மோதிரத்தை அபிஷேக் பச்சன் தன்னுடைய விரலில் அணிந்துகொள்ளவில்லை. மேலும், அபிஷேக் வீட்டை விட்டு வெளியேறி ஐஸ்வர்யா வசித்து வருகிறார். அவரது மாமியாருடன் பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. இதனை அப்ஷேக் கண்டுக்கொள்ளவில்லை.

மாமியார் டார்ச்சர்; கணவருடன் விவாகரத்து? புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்! | Aishwarya Rai Answer To Divorce Rumours

இதனால், இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், அபிஷேக் பச்சன் தனது 48வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். கணவரது பிறந்தநாளுக்கு அவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ஐஸ்வர்யா ராய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்து விட்டார் என கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.