நானா.. உன் அம்மாவா; கண்டிஷன் போட்ட ஐஸ்வர்யா ராய்? பிரிந்த அபிஷேக் பச்சன்!
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் விவகாரம் குறித்த பல தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் விவகாரம்
இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான இவர், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2011ல் ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கிவிட்டார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே அவர்கள் இரண்டு பேருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதனால்தான் அவர் அணிவித்த மோதிரத்தை அபிஷேக் பச்சன் தன்னுடைய விரலில் அணிந்துகொள்ளவில்லை.
விவாகரத்து?
இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது. இநிந்லையில், இதுகுறித்து பேசியுள்ள பத்திரிகையாளர் அந்தணன், "அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் பிரச்னை குறித்து எனக்கு தெரிந்த டெல்லி நிருபர்களிடம் கேட்டபோது உண்மை என்கிற மாதிரிதான் சொல்கிறார்கள்.

என்ன பிரச்னை என்று கேட்டால் வழக்கமாக எல்லோர் வீட்டிலும் வருவது போன்ற மாமியார், மருமகள் பிரச்னைதான் என்று கூறுகிறார்கள். ஐஸ்வர்யா ராய் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.
அபிஷேக் பச்சனிடம் நான் முக்கியமா இல்லை உன் அம்மா முக்கியமா என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால் தனியாக ஒரு வீட்டில் தங்கலாமா என்ற யோசனைக்கும் அபிஷேக் வந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil