மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடிய நடிகை ஐஸ்வர்யா லஷ்மி - அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!

Aishwarya Lekshmi Tamil Cinema Marriage
By Swetha Nov 20, 2024 10:17 AM GMT
Report

ஐஸ்வர்யா லஷ்மி திருமணத்துக்கு இணையதளத்தில் வரன் தேடுவது குறித்து பேசியுள்ளார்.

நடிகை  ஐஸ்வர்யா லஷ்மி

தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா லஷ்மி விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து, 'ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி, பொன்னியன் செல்வியில் பூங்குழலியாக நடைத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடிய நடிகை ஐஸ்வர்யா லஷ்மி - அடுத்து காத்திருந்த அதிர்ச்சி! | Aishwarya Lekshmi Shares About Matrimonial Site

இந்த நிலையில், தனக்கு திருமணத்துக்கு வரன் தேடிய அனுபவம் பற்றி அவர் கூறியதாவது: திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்யும் படி எனது தாயாரிடம் கூறினேன்.

'பொன்னியின் செல்வன் 2' படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தடை - சோகத்தில் ரசிகர்கள்

'பொன்னியின் செல்வன் 2' படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தடை - சோகத்தில் ரசிகர்கள்

மேட்ரிமோனி

அதன்படி எனது படத்துடன் கூடிய மணப்பெண் விவரக் குறிப்பு மேட்ரிமோனி தளத்தில் இடம்பெற செய்யப்பட்டது. ஆனால், அதை எல்லோரும் போலி என்று நினைத்து விட்டனர். திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எட்டு, பத்து, 25 வயதில் திருமணம் என்பது எனக்கு கனவாகவே இருந்தது.

மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடிய நடிகை ஐஸ்வர்யா லஷ்மி - அடுத்து காத்திருந்த அதிர்ச்சி! | Aishwarya Lekshmi Shares About Matrimonial Site

குருவாயூரில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் வளர வளர என் பார்வை மாறியது. என்னைச் சுற்றியுள்ள திருமணமானவர்களை நான் பார்க்கும்போது, ​​அவர்களில் பலர் மகிழ்ச்சியாக இல்லை.

ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனக்கு இப்போது 34 வயதாகிறது, கடந்த ஒரு வருடத்தில், ஒரே ஒரு குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டேன். எனக்கு தெளிவும் விழிப்புணர்வும் வந்தபோதுதான் திருமண வாழ்க்கை பற்றி உணர்ந்தேன். என்று தெரிவித்துள்ளார்.