'பொன்னியின் செல்வன் 2' படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தடை - சோகத்தில் ரசிகர்கள்
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் 2 நாளை வெளியீடு
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 28) வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட பலர் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் கைப்பற்றியுள்ளது. அதே போல் உலகம் முழுவதும் லைகா நிறுவனமே நேரடியாக படத்தை வெளியிடுகிறது.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கில் இதுவரை 17 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு திடீர் தடை
பொன்னியின் செலவன் 2 படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது.
பொதுவாக முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதுண்டு.
அதன் படி நள்ளிரவு 1 மணி அல்லது அதிகாலை நேரங்களில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.