தவறாகத் தொட்டார்.. வேதனை தெரிவித்த பொன்னியின் செல்வன் பூங்குழலி!

Aishwarya Lekshmi Tamil Cinema Indian Actress
By Sumathi Dec 05, 2022 04:30 PM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனக்கு நடந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள சினிமாவின் மூலம் திரையுலகம் வந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் தனுஷின் ஜெகமே தந்திரம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, புத்தம்புது காலை, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பின் ஜாக்பாட்டாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அமைந்தது.

தவறாகத் தொட்டார்.. வேதனை தெரிவித்த பொன்னியின் செல்வன் பூங்குழலி! | Aishwarya Lekshmi Opens Up Bad Experience

அதில் பூங்குழலியாக அனைவரது மனதையும் கவர்ந்தார். இதன் மூலம் கோலிவுட்டில் தனி அடையாளம் பதித்து விட்டார். தற்போது விஷ்னு விஷாலுடன் இவர் நடித்த கட்டா குஸ்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

தவறாகத் தொட்டார்

"நகைச்சுவையை மையமாக வைத்து தயாரான எந்தப் படத்திலும் இதுவரை நடிக்காமல் இருந்த எனக்கு முதல் தடவையாக 'கட்டா குஸ்தி' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் எனக்கு ஒரு சவாலாகவும் இருந்தது. சமீப காலமாக நகைச்சுவைப் படங்கள் அதிகம் வரவில்லை. நான் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களில் சர்வ சாதாரணமாக நடித்து விடுவேன்.

தவறாகத் தொட்டார்.. வேதனை தெரிவித்த பொன்னியின் செல்வன் பூங்குழலி! | Aishwarya Lekshmi Opens Up Bad Experience

ஆனால் நகைச்சுவையாக நடிப்பது கஷ்டம். குஸ்தி வீராங்கனையாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். என் பாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்திருக்கிறேன். ஏற்கனவே ஒருவரை நான் அடித்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் என்னை தவறாகத் தொட்டார். அதனால் அடித்து விட்டேன். சமீப காலமாக அப்படி யாரையும் அடித்த அனுபவம் இல்லை.

மோசமான அனுபவம்

எல்லா பெண்களும் தங்கள் வாழ்க்கையில் மோசமான தொடுதல்களை எதிர்கொள்வார்கள். பேட் டச் இன்னும் ஒரு பிரச்சனை. குருவாயூரில் சிறுவயதில் இப்படி ஒரு சம்பவத்தை சந்திக்க நேர்ந்தது. கோயம்புத்தூரில் ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போதும் அப்படித்தான் நடந்தது. இப்போது அப்படி ஏதாவது நடந்தால் நான் எதிர்வினையாற்றுவேன்.

ஆனால் சிறு வயதில் எப்படி நடந்துகொள்வது என்று தெரியவில்லை. இது போன்ற விஷயங்கள் பின்னாளில் நம் மனதில் நிற்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் மாற்றம் வருமா என்று தெரியவில்லை. கார்கி போன்ற படங்களில் அவை விவாதிக்கப்படுகின்றன.

அப்படிப்பட்ட படங்கள் விவாதங்களை ஆரம்பிக்கும். பாதிக்க்பட்டவர்களின் மன மோதல்கள் விவாதிக்கப்பட வேண்டும் என வேதனை தெரிவித்துள்ளார்.