இளவரசே நான் இப்போ work from home : வைரலாகும் வந்தியதேவன் பதில்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகியுள்ளது.
பொன்னியின் செல்வன்
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.
இப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக படத்தின் ஓடிடி உரிமையை 125 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வந்தியத்தேவனை அழைத்த ஆதித்தகரிகாலன்
இந்த நிலையில் பொன்னியின் செல்வனில் நடித்துள்ள நடிகர்கள் அவ்வப்போது கதாபாத்திரமாகவே மாறி ட்வீட் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சரி. தஞ்சைக்கு வருகிறேன்.
சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா! @Karthi_Offl @actor_jayamravi @trishtrashers pic.twitter.com/6JW2s8cfK8
— Aditha Karikalan (@chiyaan) September 13, 2022
எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
வந்தியத்தேவன்
அதற்கு வந்தியதேவன் கதாபாத்திரமாக மாறி நடிகர் கார்த்தி நடிகர் விக்ரமின் பதிவிற்கு ரீ- ட்வீட் செய்தார். அதில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் இலங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை.
As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me.” என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.