கிரிக்கெட் வீரரை தீவிரமாக காதலித்த ஐஸ்வர்யா லட்சுமி - சுடச் சுட தகவல்!

Aishwarya Lekshmi Tamil Cinema Yuvraj Singh
By Sumathi May 11, 2023 05:30 PM GMT
Report

கிரிக்கெட் வீரரை காதலித்ததாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

 ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள சினிமாவின் மூலம் திரையுலகம் வந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் தனுஷின் ஜெகமே தந்திரம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, புத்தம்புது காலை, கார்கி, கேப்டன், கட்ட குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கிரிக்கெட் வீரரை தீவிரமாக காதலித்த ஐஸ்வர்யா லட்சுமி - சுடச் சுட தகவல்! | Aishwarya Lakshmi Fell In Love With A Cricketer

அதன்பின் ஜாக்பாட்டாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அமைந்தது. அதில் பூங்குழலியாக அனைவரது மனதையும் கவர்ந்தார். இதன் மூலம் கோலிவுட்டில் தனி அடையாளம் பதித்து விட்டார்.

காதல்

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "நான் பிறந்தபோது என் அப்பா எனக்கு ஸ்ரீ லட்சுமி என்று பெயர் வைத்தார். அம்மா ஐஸ்வர்யா என்று பெயர் வைத்தார். கடைசியில் ஐஸ்வர்யா லட்சுமி ஆனேன். எனக்கு லட்சிய கதாபாத்திரம் எதுவும் இல்லை. ஆனால் வில்லி வேடங்களில் நடிக்க பிடிக்காது.

கிரிக்கெட் வீரரை தீவிரமாக காதலித்த ஐஸ்வர்யா லட்சுமி - சுடச் சுட தகவல்! | Aishwarya Lakshmi Fell In Love With A Cricketer

வில்லியாக நடிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன். காஞ்சீபுரம் பட்டு புடவைகள் கேரளா சம்பிரதாய புடவைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஓய்வாக இருக்கும்போதெல்லாம் புடவைகளைக் கட்டிக் கொண்டு போட்டோ எடுத்துக் கொள்வேன். அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் படங்கள் அதிகமாக பார்ப்பேன்.

கிரிக்கெட் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் என்றால் மிகவும் இஷ்டம். ஆறாம் வகுப்பில் தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை அவரை மனதிற்குள் காதலித்து கொண்டே இருந்தேன். இப்போது கிரிக்கெட் பார்க்க நேரமே இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.