அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கு மாமனாராகும் தம்பி ராமையா - விரைவில் கல்யாணம்!
நடிகர் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா அர்ஜுன்
தமிழில் பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன். அதன் பின் சொல்லிவிடவா படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், இவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காமெடி நடிகராகவும் குணசித்ர நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வரும் தம்பி ராமையா தனது மகன் உமாபதி ராமையாவுக்கு வெளிநாட்டில் பெண் பார்த்து வருவதாக கூறி வந்த நிலையில்,
திருமணம்?
தற்போது அர்ஜுனுக்கு சம்பந்தியாகப் போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஐஸ்வர்யாவை உமாபதி காதலித்து வந்த நிலையில்,
பெரியவர்கள் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடைபெறப் போவதாக வட்டாரங்களில் பேசப்படுகிறது.