ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்லும்...ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
ஏர்டெல் தனது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
ரீசார்ஜ் கட்டணம்
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக நல்ல வணிக மாதிரியை செயல்படுத்த, ஒரு பயனரின் மொபைல் சராசரி வருவாய் (ஏஆர்பியு) ரூ.300 க்கு மேல் இருக்க வேண்டும் என்பதை பார்தி ஏர்டெல் பராமரிப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஏர்டெல் தனது மொபைல் கட்டணங்களை 2024 ஜூலை 3 முதல் மாற்றி அமைக்க உள்ளது. பட்ஜெட் சவாலான நுகர்வோர் மீதான எந்தச் சுமையையும் நீக்கும் வகையில், நுழைவு நிலை திட்டங்களில் மிகக் குறைந்த விலை உயர்வு (ஒரு நாளைக்கு 70 பைசாவுக்கும் குறைவாக) இருப்பதை உறுதி செய்துள்ளோம்.”
அதிரடி உயர்வு
என பார்தி ஏர்டெல் ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, புதிய கட்டணங்களாக, அன்லிமிடெட் வாய்ஸ் திட்டங்களில், ரூ.179 ரீசார்ஜ் திட்டம் ரூ.199 ஆகவும், ரூ.455 திட்டம், ரூ.599 ஆகவும், ரூ.1,799 திட்டம் ரூ.1,999 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Airtel announces revised mobile tariffs. These prices apply to all circles, including Bharti Hexacom Ltd. Circles. The new tariffs for all Airtel plans will be available on https://t.co/jASVh3skYf. in starting July 3rd, 2024. pic.twitter.com/3GL5vTF1xr
— ANI (@ANI) June 28, 2024
ஒரு பயனருக்கான சராசரி வருவாயை பெருக்குவது, 5G ஸ்பெக்ட்ரமில் முதலீடுகளை ஆதரிப்பது மற்றும் மூலதனத்தில் எளிய வருவாயைப் பெறுவதற்கான முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களை ஜியோ நிர்வாகம் 12 முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்த்துவதாக அறிவித்தது. இந்த நிலையில், ஏர்டெல்லும் தனது ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு கட்டண உயர்வை அறிவித்தது அவற்றின் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.