மீண்டும் விலை உயரப்போகும் ரீசார்ஜ் கட்டணம் - இடியாய் விழுந்த செய்தி!
ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டும் விலை உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரீசார்ஜ் கட்டணம்
கடந்த ஆண்டு ஜூலை மாதம், 10 முதல் 27 சதவிகிதம் வரை மாதாந்திர பிளான்களில் விலை ஏற்றப்பட்டன. ஏர்டெல் மாதாந்திர ப்ரீபேட் பிளேனை 179 ரூபாயிலிருந்து 199 ரூபாய்க்கு உயர்த்தியது.
போஸ்ட்பேட் பிளானை 399ல் இருந்து 449 ரூபாய்க்கு உயர்த்தியது. தொடர்ந்து ஜியோவும் விலையை உயர்த்தியது. இருப்பினும் கடந்த மே மாத எண்ணிக்கையின் படி,
விலை உயர்வு?
ஏர்டெல் 2.5 லட்ச சந்தாதாரர்களை கூடுதலாகவும், ஜியோ 27 லட்ச சந்தாதாரர்களை கூடுதலாகவும் பெற்று இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் விலை ஏற்றப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில்,
தற்போது ஜூலை - ஆகஸ்ட் மாதங்களிலேயே விலை ஏற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.