தொடரும் விமான நிலைய விபத்துகள் இடம்பெறாதது ஏன் ? - தயாநிதி மாறன் எம்.பி கேள்வி!
விமான நிலைய விபத்து குறித்துக்கு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்று எம்.பி தயாநிதி மாறன் கேள்விஎழுப்பியுள்ளார்.
இழப்பீடு நிதி
டெல்லி விமான நிலையத்தில் கூரை இடிந்து விழுந்ததுபோல், குவஹாத்தி, ராஜ்கோட் மற்றும் ஜபல்பூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களிலும் விபத்துகள் நிகழ்ந்த நிலையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் கழக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவர் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார்.
நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில், குறிப்பாக டெல்லி, குவஹாத்தி, ராஜ்கோட் மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவங்கள் குறித்து அரசு அறிந்திருக்கிறதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன என கேள்வி எழுப்பினார்
சம்பவங்களில் பதிவான இறப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரங்கள் என்ன என கேள்வி எழுப்பினார். காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஏதேனும் நிதி இழப்பீடு வழங்கியுள்ளதா மற்றும் அப்படியானால், கடந்த ஐந்தாண்டுகளில் இதுபோன்ற ஒவ்வொரு சம்பவத்திற்கும் வழங்கப்பட்டுள்ள இழப்பீடு நிதியின் விவரங்கள் என்ன என கேள்வி எழுப்பினார்.
இந்த விபத்துகள் குறித்து அரசாங்கம் ஏதேனும் விசாரணையைத் தொடங்கியுள்ளதா மற்றும் அப்படியானால், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் என்ன என கேள்வி எழுப்பினார்.
மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் ஆய்வு செய்ய அரசாங்கம் முன்மொழிகிறதா மற்றும் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளும் அதன் விவரங்களும் என்ன என கேள்வி எழுப்பினார்.
ஒப்பந்ததாரர்களுக்கு என்ஓசி/சிசி வழங்குவதற்கு முன்பு முறையான தணிக்கை/ ஆய்வுகள் செய்துவரப்படவில்லை என்பது உண்மையா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன என கேள்வி எழுப்பினார்.
நடவடிக்கை என்ன..
பாதிக்கப்பட்ட விமான நிலையங்களில் அடையாளம் காணப்பட்ட கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் அனைத்து விமான நிலையங்களுக்களில் நடைபெற்ற பணியின் ஆய்வுகள் ஏதேனும் தொடங்கப்பட்டுள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் யாவை என கேள்விகளை எழுப்பினார்.
முன்னதாக 2024-25 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளது.மேலும் ரயில் விபத்துகள் குறித்தும், விமான நிலைய விபத்து குறித்தும் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.