கொச்சி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : பதட்டத்தில் விமானத்துறை

By Irumporai Mar 26, 2023 09:35 AM GMT
Report

கொச்சி அருகே இந்திய கடற்படை சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ள சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கிழே விழுந்ததில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

கொச்சி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : பதட்டத்தில் விமானத்துறை | Helicopter Crashed At Nedumbassery Airport

 பதட்டம்

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கேரளாவின் கொச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டது. மேலும், விபத்து நடந்த உடனேயே, விபத்து நடந்த இடத்தில் ஆய்வுக்காக விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டது. இதனால் இரண்டு சர்வதேச விமானங்கள் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.