வெறும் 7 நிமிஷம் தான்.. விரைவில் வான்வழி டாக்சி - அதுவும் இந்தியாவில்?

Delhi Haryana
By Sumathi Jun 16, 2024 05:44 AM GMT
Report

 வான்வழி டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 வான்வழி டாக்சி

பிரபல விமான சேவை நிறுவனமான இன்டிகோவை நிர்வகித்து வரும் இன்டர்குளோப் என்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தியாவில் வான்வழி டாக்சி(AirTaxi) சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

air taxi

அந்த வகையில், முதற்கட்டமாக டெல்லியின் கனௌட் பிளேஸ்இல் இருந்து ஹரியானாவின் குருகிராமிற்கு இயக்கப்படவுள்ளது. இதன்படி, பயணிகளை டெல்லியில் இருந்து ஹரியானாவிற்கு(125 கிலோமீட்டர்கள்) ஏழு நிமிடங்களில் அழைத்து சென்றுவிடும்.

இனி சென்ட்ரல் டூ கிளாம்பாக்கம் 20 நிமிஷம் - சென்னைக்கு வரும் ஏர் டாக்சி

இனி சென்ட்ரல் டூ கிளாம்பாக்கம் 20 நிமிஷம் - சென்னைக்கு வரும் ஏர் டாக்சி


டெல்லி-ஹரியானா

இதற்கான கட்டணமாக பயணி ஒருவருக்கு ரூ.2 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

வெறும் 7 நிமிஷம் தான்.. விரைவில் வான்வழி டாக்சி - அதுவும் இந்தியாவில்? | Air Taxi Service To Be Launched Soon Delhi

இந்த சேவையை வழங்குவதற்காக இன்டர்குளோப் நிறுவனம் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து கிட்டத்தட்ட 200 மிட்நைட் டிரோன் விமானங்களை வாங்கவுள்ளது.

2026ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதேபோன்ற சேவை மும்பை மற்றும் பெங்களூரு இடையேயும் அறிமுகம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.