கோரதாண்டவமாடும் காற்று மாசுபாடு - சென்னை உட்பட 10 நகரத்தில் 33,000 பேர் உயிரிழப்பு!

India Death Air Pollution
By Sumathi Jul 05, 2024 04:47 AM GMT
Report

காற்று மாசுபாட்டினால் சென்னை உட்பட 10 நகரத்தில் 33,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

காற்று மாசுபாடு

பிரிட்டிஷ் லான்செட் மருத்துவ ஆய்விதழில் முக்கிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

india

அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும்வாராணசி ஆகிய 10 நகரங்களில் ஆண்டுதோறும் 33 ஆயிரம் பேர்காற்று மாசுபாடு காரணமாக மரணமடைகின்றனர்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலைவிட இந்த நகரங்களில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதன் விளைவு இது. ஒவ்வொரு கியூபிக் மீட்டர் காற்றிலும் 15 மைக்ரோகிராம் வரை மட்டுமே நுண்ணிய துகள் தூசி இருத்தல் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.

உலக காற்று தர அறிக்கையில் 8ம் இடம் பிடித்த இந்தியா - துாய்மையான நகரங்களில் இடம்பிடித்தது சென்னை..!

உலக காற்று தர அறிக்கையில் 8ம் இடம் பிடித்த இந்தியா - துாய்மையான நகரங்களில் இடம்பிடித்தது சென்னை..!

அதிகரிக்கும் உயிரிழப்பு

ஆனால், 2008-லிருந்து 2019 வரையிலான காலகட்டத்தில் மேற்கூறிய 10 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் குறுகிய கால 2.5 பிஎம் காற்றில் கலந்திருப்பது பதிவாகியுள்ளது. டெல்லியில் மட்டும் ஓராண்டில் 12 ஆயிரம் பேர் கரும்புகை, தூசிஉள்ளிட்ட காரணங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

air pollution

வாராணசியில் 8,300 பேர், மும்பையில் 5,100 பேர், கொல்கத்தாவில் 4,700 பேர், சென்னையில் 2,900 பேர், பெங்களூருவில் 2,100 பேர் எனஆண்டு தோறும் காற்று மாசுபாட்டினால் பலியாவது கடந்த பத்தாண்டுகளில் வழக்கமாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.