உலக காற்று தர அறிக்கையில் 8ம் இடம் பிடித்த இந்தியா - துாய்மையான நகரங்களில் இடம்பிடித்தது சென்னை..!
காற்று மாசடைந்த நகரங்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
உலக காற்று தர அறிக்கை 2022
சுற்றுசூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் ,சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐ .க்யூ .ஏர் என்ற நிறுவனம் 'உலக காற்று தர அறிக்கை 2022' எனும் உலகின் மிகவும் காற்று மாசுடைந்த நகரங்களின் படட்டியலை செவ்வாய்கிழமை வெளியிட்டது .
அதன்படி , இந்த நிறுவன ஆய்வுக்காக 132 நாடுகளிலிருந்து 30000க்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாராத கண்காணிப்பு அமைப்புகளிடம் இருந்து 7,300 நகரங்களின் காற்று மாசு தரவுகள் பெற்று அத்தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
8-வது இடத்தில் இந்தியா
உலகின் மாசடைந்த 10 நகரங்களின் நாடுகள் பட்டியலை வரிசைப்படுத்தியுள்ளது . அந்த பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் தர வரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளதாவும் ,உலகில் மிகவும் மாசுடைந்த 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளவை என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் 6 நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளது. மேலும் முதல் 20 இடங்களில் 14 நகரங்களும் ,முதல் 50 இடங்களிள் 39 நகரங்களும் ,முதல் 100 இடங்களில் 65 நகரங்கள் உள்ளன .
முந்தைய ஆண்டு 61 நகரங்களாக இருந்தது. முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தானின் லாகூர் ,சீனாவின் ஹோடான் நகரங்களும், தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் பிவாடி ,தில்லி ஆகிய நகரங்கள் உள்ளன . இந்தியாவின் மிகவும் மாசடைந்த நகரமாக பிவாடி உள்ளது.
துாய்மையான நகரங்களில் இடம்பிடித்த சென்னை
உலகில் மிகவும் மாசுபட்ட முதல் 50 நகரங்களில் டெல்லி 4 ஆவது இடத்திலும் அடுத்த படியாக கொல்கத்தா அதிக மாசு அடைந்த நகரமாக உள்ளது .
இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான அளவை விட 5 மடங்கு மாசுபாடு கொண்ட சென்னை தூய்மையான நகரமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது .
2017 ஆம் ஆண்டின் சராசரி மாசு அளவை விட பெருநகரங்களான ஹைதராபாத் மற்றும் பெங்களூர் நகரங்களின் மாசு அளவு அதிகரித்துள்ளது .
நொய்டா , காசியாபாத் , குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட என்சி ஆர் பிராந்தியங்களின் மாசு அளவு குறைந்துள்ளதாக இவ்வறிக்கை தெரிவிக்கிறது.
உலகின் மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை சாட் ,இரண்டாவது இடத்தை ஈராக், மூன்றாவது இடத்தை பாகிஸ்தான் ,தொடர்ந்து பக்ரைன் , வங்கதேசம் , பர்கினா ,பாசோ ,குவைத் , இந்தியா , எகிப்து மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன .