போகி எதிரொலி ஓவர் காற்று மாசு - தரையிறங்காமல் சென்ற விமானங்கள் - திணறும் சென்னை..!
இன்று போகி பண்டிகையை தமிழக மக்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்துள்ளனர்.
போகி பண்டிகை
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு இணங்க இன்று தமிழக மக்கள் உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
தங்கள் வீடுகளில் இருந்த பழைய பொருட்களை, காலையே தீயிட்டு கொளுத்தி சிறுவர்கள் மேலமடித்து, பாட்டு பாடி, ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
பண்டிகை களைகட்டிய அதே நேரத்தில் நாம் மற்றொரு விஷயத்தை முற்றிலுமாக மறந்து விட்டோம்.காற்று மாசு.
காற்று மாசு
சென்னை விமான நிலையத்தில் ஓடுதளம் சரியாக தெரியாத காரணத்தால், சிங்கப்பூர், லண்டன் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் தவித்து வருவதாகவும், ஹைதராபாத் விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், காற்று மாசு தொடர்பாக வெளியான தகவலின் படி, சென்னை அதிகபட்சமாக மணலி பகுதியில் 287 அளவு காற்று மாசு பதிவாகி உள்ளது. அதனை தொடர்ந்து, பெருங்குடி - 264 அளவு, எண்ணூர் - 217 அளவு காற்று மாசு, ராயபுரம் - 201 அளவு காற்று மாசு, அரும்பாக்கம் - 194 அளவு காற்று மாசு, கொடுங்கையூர் - 145 அளவு காற்று மாசு மற்றும் ஆலந்தூர் - 124 அளவு காற்று மாசு பதிவாகி உள்ளது.