முக்கிய செய்தி - பொங்கல் Effect - சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களை செய்யப்பட்டுள்ளதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகை
3 நாட்கள் பொங்கல், சனி ஞாயிறு வார விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால், வெளிஊரில் இருந்து வேலைக்காக சென்னைக்கு வந்த பல மக்களும் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பல இடங்களிலும் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்யும் பணியில் காவல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த சூழலில், வரும் 17-ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
அந்த குறிப்பில், ஜனவரி 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.
மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து ( War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் ( Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ( விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படும்) வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.