அதிகரிக்கும் காற்று மாசு.. சக்கரை நோய் வருமா? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
காற்று மாசு அதிகரிப்பதால் சக்கரை நோய் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்த மாசு
சமீப காலமாக சென்னை மற்றும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவை விட சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. இந்த காற்று மாசு ஏற்படுவதால் மக்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்துள்ளானர்.
காற்று மாசு காரணமாக சென்னை மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு "டைப் 2" நீரிழிவு நோய் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சர்வதேச பத்திரிக்கைகளில் வெளியான ஆய்வின் முடிவுகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஆய்வில் தகவல்
இந்நிலையில், ஆய்விற்கு சென்னையில் 6,722 பேரிடமும், டெல்லியில் 5,342 பேரிடமும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்தனர். இந்த ஆய்வு 2010 - 2016, மொத்தம் 6 ஆண்டுகள் வரை இந்த சோதனை நடைபெற்றது. தெற்காசியாவின் கார்டியோ மெட்டபாலிக் ரிஸ்க் குறைப்பு மையம் இந்த ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வு முடிவின்படி அவர்கள் காற்று மாசுபாட்டிற்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். மேலும் காற்று மாசு காரணமாக இளைஞர்களும் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் காற்று மாசுபாட்டால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.