'Air Kerala' கேரளாவின் சொந்த விமான நிறுவனம் - சேவை எப்போது தொடங்கும்?

Kerala India Flight
By Jiyath Jul 10, 2024 06:53 AM GMT
Report

2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏர் கேரளா நிறுவனம் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர் கேரளா

கேரள முதலமைச்சராக உம்மன் சாண்டி பதவி வகித்தபோது கடந்த 2005-ம் ஆண்டு ‘ஏர் கேரளா’ விமான திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் வளைகுடா நாடுகளுக்கு குறைந்த செலவில் விமான சேவை இயக்குவதற்காக துவங்கப்பட்டது.

ஆனால், நினைத்தபடி இந்த திட்டம் கைகூடவில்லை.எனினும், இத்திட்டத்தை தொடங்க கேரளாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடாவில் நாடுகளில் தொழில் செய்து வரும் அஃபி அஹமது மற்றும் அயூப் கல்லடா ஆகிய 2 தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டினர். மேலும், கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளா விமான நிறுவனத்தை உருவாக்கினார்.

பேன்சி நம்பர் பிளேட் ஏலம் - ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான பதிவு எண்!

பேன்சி நம்பர் பிளேட் ஏலம் - ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான பதிவு எண்!

எப்போது தொடங்கும்? 

இந்நிலையில் கிட்டத்தட்ட19 ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டம் சாத்தியமாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் கேரளா விமான நிறுவனம் தொடங்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதன் மூலம், 2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஏர் கேரளா நிறுவனம் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலில் 3 விமானங்களுடன் விமான சேவை தொடங்கப்படும். பின்னர் படிப்படியாக வளைகுடா நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.