பேன்சி நம்பர் பிளேட் ஏலம் - ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான பதிவு எண்!

Delhi India
By Jiyath Jul 10, 2024 11:42 AM GMT
Report

0001என்ற கார் பதிவு எண் 23.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. 

போக்குவரத்து துறை

வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு டெல்லி போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது. அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஏலம் நடைபெற்றது.

பேன்சி நம்பர் பிளேட் ஏலம் - ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான பதிவு எண்! | 0001 Fancy Car Number Sold For Rs 23 Lakh

இதில், மார்ச் மாதம் நடைபெற்ற ஏலத்தில் 0001 என்ற பேன்சி எண்ணுக்கு ரூ. 5 லட்சம் ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டது. இறுதியில் இந்த பதிவு எண் 23.4 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

அனுசுயா To அனுகதிர் சூர்யா.. ஆணாக மாறிய பெண் IRS அதிகாரி - வரலாற்றில் முதல் முறை!

அனுசுயா To அனுகதிர் சூர்யா.. ஆணாக மாறிய பெண் IRS அதிகாரி - வரலாற்றில் முதல் முறை!

பேன்சி எண்

இதனை ஏலத்தில் எடுத்தவரின் பெயர், விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கு அடுத்தபடியாக ஜூன் மாத ஏலத்தில் 0009 என்ற பதிவு எண் ரூ. 11 லட்சத்திற்கும், ஜனவரி மாதத்தில் 0007 என்ற எண் ரூ. 10.8 லட்சத்திற்கும் ஏலம் போனது.

பேன்சி நம்பர் பிளேட் ஏலம் - ரூ.23 லட்சத்துக்கு விற்பனையான பதிவு எண்! | 0001 Fancy Car Number Sold For Rs 23 Lakh

இதுபோன்ற பேன்சி எண்களை பெரும்பாலும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஏலத்தில் எடுப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.