நடுவானில் 184 பேருடன் பறந்த விமானத்தில் தீ - அவசர தரையிறக்கம்!

Accident Flight Air India
By Sumathi 1 மாதம் முன்

நடுவானில் விமானத்தில் தீப்பிடித்ததை தொடர்ந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் தீ

ஏர் இந்தியாவிற்கு சொந்தமான 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பி737-800' என்ற விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நோக்கி கிளம்பியது. விமானத்தில் 184 பயணிகள் இருந்தனர்.

நடுவானில் 184 பேருடன் பறந்த விமானத்தில் தீ - அவசர தரையிறக்கம்! | Air India Flight With 184 Passengers On Fire

விமானம் மேலே கிளம்பி 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது, ஒரு இன்ஜீனில் தீப்பிடித்து புகை வெளியேறியது. இதனை கண்டுபிடித்த விமானி உடனடியாக விமானத்தை திருப்பி அபுதாபியில் தரையிறக்கினார்.

தரையிறக்கம்

பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அனைவரும் நலமுடன் உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதனை, இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.