குடி போதையில் விமானத்தை இயக்கிய "ஏர் இந்தியா"பைலட்; பாய்ந்த சட்டம் - பகீர் தகவல்!

India Flight Air India
By Swetha Mar 28, 2024 11:22 AM GMT
Report

தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு பயணிக்கும் விமானத்தை இயக்கிய விமானி ஒருவர் குடிபோதையில் இருந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது.

ஏர் இந்திய பைலட்

பொதுவாக வாகனங்களை ஓட்டுவோர் போதையில் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை அதேபோல, ஆபத்துகள் சூழந்த ஆகாயப் பயணத்தில் போதையில் விமானத்தை செலுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

குடி போதையில் விமானத்தை இயக்கிய "ஏர் இந்தியா"பைலட்; பாய்ந்த சட்டம் - பகீர் தகவல்! | Air India Fires Drunk Pilot For Operating Flight

அதற்காகவே, விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக விமானிகளுக்கு ப்ரீத் அனலைசர் சோதனை செய்யப்படுகிறது. இதில் தேறினால் மட்டுமே அவர்கள் விமானங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில், தாய்லாந்தின் ஃபுகெட்டிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு வந்த சர்வதேச விமானம் ஒன்றின் தலைமை விமானி ஒருவர் முழு போதையில் இருந்துள்ளார். அவர் பயணத்தை முடித்து விட்டு விமானத்திலிருந்து இறங்கியதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அது உறுதியானது.

விமானத்தில் ஏறுவதற்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் தேறிய அவர், விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் மதுவை அருந்தியதாக தெரியவந்துள்ளது.

விமான கழிவறையை பூட்டிக்கொண்டு நபர் செய்த காரியம்; பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விமான கழிவறையை பூட்டிக்கொண்டு நபர் செய்த காரியம்; பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பகீர் தகவல்

இதை தொடர்ந்து, போதையுடனே தாய்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த விமானத்தை அவர் இயக்கியது உறுதிசெய்யப்பட்டதால், உடனடியாக விமான நிறுவனமான ’ஏர் இந்தியா’ அவரை பணியிலிருந்து நீக்கியது.

குடி போதையில் விமானத்தை இயக்கிய "ஏர் இந்தியா"பைலட்; பாய்ந்த சட்டம் - பகீர் தகவல்! | Air India Fires Drunk Pilot For Operating Flight

இதையடுத்து, அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இது குறித்து பேசிய ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் , "இது போன்ற போதை விவகாரங்களில் எங்களுக்கு சகிப்புத்தன்மை கிடையாது.

போதை விமானிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும். தாய்லாந்து விமானத்தை போதையில் செலுத்தி வந்த விமானியை பணியிலிருந்து நீக்குவதோடு, குடிபோதையில் விமானத்தை இயக்குவது குற்றச் செயல் என்பதால் எஃப்ஐஆர் பதிவு செய்யவும் புகார் அளித்துள்ளோம்.

மேலும் இவை அனைத்தும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது" என அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில், 33 விமானிகள் மற்றும் 97 கேபின்-குழு உறுப்பினர்கள் போதை உட்கொண்டதற்கான ப்ரீதலைசர் சோதனையில் தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.