இனி நீங்களும் பிளைட்டில் போகலாம்; ரூ.1,500க்குள் கட்டணம் - மிஸ் பண்ணாதீங்க!
விமான பயண சலுகை கட்டணம் குறைந்துள்ளது.
சலுகை கட்டணம்
பண்டிகையையொட்டி இன்டிகோ விமான நிறுவனம் விமான கட்டணம் கணிசமாக குறைந்துள்ளது.
இன்டிகோவை தொடர்ந்து இப்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் சலுகையை அறிவித்துள்ளது. 'ஃபிளாஷ் சேல்' என்ற சிறப்பு டிக்கெட் விற்பனையை கொண்டு வந்துள்ளது. இதன்கீழ் விமான டிக்கெட் கட்டணம் ரூ.1,498ல் தொடங்குகிறது.
இதன் மூலம் ஜனவரி 24 முதல் செப்டம்பர் 30 வரையிலான தேதிகளுக்கு உள்நாட்டில் பயணிக்கும் விமானங்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் இணையதளம், மொபைல் செயலி அல்லது பிற முன்பதிவு தளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் முன்பதிவு செய்யும் போது எந்த வசதிக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் முலம் 'எக்ஸ்பிரஸ் லைட்' என்ற சலுகை மூலம் கூடுதல் கட்டண குறைப்பும் கிடைக்கும். லாயல்டி உறுப்பினர்களாகும் நபர்களுக்கு கட்டணத்தில் கூடுதலாக 25% தள்ளுபடி கிடைக்கும்.
அவர்களுக்கு சூடான உணவுகள், ஜன்னல் இருக்கைகள் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும். நீங்கள் கொண்டு செல்ல வேண்டிய லக்கேஜ்களை 3 கிலோ அதிகரிக்கலாம். இதற்கு நீங்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.