குழந்தையின் டயப்பர், சிந்திய சிறுநீர் பை; விமானத்தில் அருவருப்பு விஷயம் - பணிப்பெண் ஆதங்கம்
விமானத்தில் நடக்கும் மோசமான விஷயங்கள் குறித்து பணிப்பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான பயணம்
அமெரிக்காவின் விமான நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர் மரிகா மிகுசோவா. இவர் 'டைரி ஆஃப் எ ஃப்ளைட் அட்டெண்டன்ட்' என்ற புத்தகத்தில் விமானத்தில் தான் அனுபவித்த மோசமான அனுபவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அதில், ஒருமுறை துருக்கி பயணத்தின் போது, மூன்று பயணிகள் தங்கள் சிறுநீர் பையை விமானத்தில் விட்டுச் சென்றனர். அது விமானம் முழுவதும் சிந்திய நிலையில், துப்புரவு பணியாளர்களும் முறையாக சுத்தம் செய்யாமல், குப்பையை போட்டு மூடி விட்டனர்.
பணிப்பெண் ஆதங்கம்
சில நேரங்களில் மாதவிடாய் ரத்தம் இருக்கும். ஆனால் சுத்தம் செய்வதற்கு பதிலாக, ஒரு போர்வை அங்கு போடப்படும். ஏனெனில் முழுமையாக சுத்தம் செய்ய நேரமிருக்காது. இந்திய விமானங்களில் பயணிகள் தங்கள் கால்களைத் துடைக்க துண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
ஒருமுறை ஒரு பயணி இதை விட மோசமாக, அவர் பயன்படுத்திய டவலைக் தர மறுத்து, அந்த டவலால் தன் அக்குளை துடைக்க ஆரம்பித்தார். பின்னர் அந்த அசுத்தமான துண்டு என்னிடம் தரப்பட்டது. நான் முதலில் வாங்க தயங்கினேன், பின்னர் அந்த டவலை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்தேன்.
சில நேரங்களில் பெற்றோர்கள் சீட் பாக்கெட்டில் அழுக்கு டயப்பர்களை கூட வைக்கிறார்கள். தங்களுடன் சக பயணிகள் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, இவ்வாறான விஷயங்களை அவர்கள் முற்றிலும் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.