மதுரையில் துவங்கப்பட்ட எய்ம்ஸ் பணி..இது தேர்தலுக்காக - சாடிய மா.சுப்ரமணியன்

Tamil nadu Madurai Ma. Subramanian
By Karthick Mar 05, 2024 08:47 AM GMT
Report

நீண்ட காலமாக துவங்காமல் இருந்து வந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் காட்டும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

மதுரை எய்ம்ஸ்

மதுரை மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது எய்ம்ஸ் மருத்துவமனை. ஆனால், அடிக்கல் நாட்டப்பட்டதை தவிர பெரிதாக பணிகள் துவங்கிடவில்லை.

aiims-work-starts-due-to-election-ma-subramanian

கடந்த 2021-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் தற்போதைய அமைச்சர் உதயநிதி கடுமையாக மத்திய அரசு மீது வைத்த குற்றச்சாட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை.

ஆழம் பார்த்தார்..! மோடி - பிடிஆர் சந்திப்பு - அதிமுக ஜெயக்குமார் கருத்து..!

ஆழம் பார்த்தார்..! மோடி - பிடிஆர் சந்திப்பு - அதிமுக ஜெயக்குமார் கருத்து..!

தேர்தல் வருவதால் 

தற்போது மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று 5 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் துவங்கியுள்ளது. இதுவே பெரும் தலைப்பு செய்தியாக மாறியிருக்கும் நிலையில், அது குறித்து தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

aiims-work-starts-due-to-election-ma-subramanian

சென்னை சைதாப்பேட்டை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது என குற்றம்சாட்டினார்.

aiims-work-starts-due-to-election-ma-subramanian

மேலும், திமுக அரசு மத்திய அரசின் எந்தத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடவில்லை என உறுதிபட தெரிவித்த அவர், பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் எடுத்தோம், கவிழ்த்தோம் என பேசுவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.