முடிவுக்கு வரும் எய்ட்ஸ் நோய் - பரிசோதனையில் ஆராய்ச்சியாளர்கள் உறுதி!
எய்ட்ஸை அடியோடு ஒழிக்க இயலும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோய்
40 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோய்க்கு ஒரு முடிவுரை எழுதமுடியவில்லை. நவீன மருத்துவ அறிவியலுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டுள்ளனர். ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவ மையத்தை சேர்ந்த வல்லுநர்கள் பயன்படுத்திய மருத்துவ செயல்முறையை ’கிரிஸ்பர்’ என்ற சொல்லால் குறிக்கின்றனர்.
கத்திரிக்கோல் கொண்டு ஒரு ரிப்பனின் தேவையில்லாத பகுதியை நறுக்கி எறிவதற்கு ஒப்பான மருத்துவ தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட என்சைம்களைப் பயன்படுத்தி, டிஎன்ஏ இழைகளில் வேண்டாத பகுதியை நறுக்குகிறார்கள்.
கிரிஸ்பர்
இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் குறிப்பிட்ட வைரஸை கண்டறிந்து அழிக்க இயலும். ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பம் மூலம் எய்ட்ஸ் பாதிப்புக்கு காரணமான டிஎன்ஏ இழை பாதிப்புகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற இயலும்.
இது எய்ட்ஸ் மட்டுமன்றி புற்றுநோய், டிமென்ஷியா, பிறவி பார்வைக் குறைபாடு மற்றும் வம்சாவளியாக தொடரும் பல்வேறு நோய்களிலும் விரைவில் தீர்வு காண இயலும் என மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.