தமிழகம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - கொதித்த ஈபிஎஸ்!

ADMK Edappadi K. Palaniswami Drugs
By Swetha Mar 04, 2024 06:34 AM GMT
Report

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  போதைப் பொருள் அதிகரிப்பை கண்டித்து அறிவித்த ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

கண்டன ஆர்பாட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளை, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என அறிவித்திருந்தார்.

edappadi palaniswami

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசை கண்டித்து சென்னை, மதுரை, சேலம், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

கூட்டணியில் விலகியதற்கு EPS தண்டனை அனுபவிப்பார், சின்னம் முடங்க வாய்ப்பு இருக்கு - டிடிவி தினகரன்!

கூட்டணியில் விலகியதற்கு EPS தண்டனை அனுபவிப்பார், சின்னம் முடங்க வாய்ப்பு இருக்கு - டிடிவி தினகரன்!

இபிஎஸ் கொந்தளிப்பு

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, செங்கோட்டையன், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - கொதித்த ஈபிஎஸ்! | Aiadmk To Protest Against Drugs In Tamil Nadu

மேலும் விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கோவையில் எஸ்.பி.வேலுமணி, புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 இதில், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.