இளம்பெண் சித்ரவதை; போராட்டத்தை அறிவித்த அதிமுக - களத்தில் இறங்கும் எடப்பாடி!
பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக போராட்டத்தை அறிவித்துள்ளது.
பணிப்பெண் சித்ரவதை
சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி. இவரின் மகன் ஆண்டோ மதிவாணன். மருமகள் மெர்லினா. இருவரும் திருவான்மியூரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களின் வீட்டில் பணி பெண்ணாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பணி செய்து வந்துள்ளார். அவர் தன்னை இருவரும் நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தினர். ஜாதி பெயரை கூறி தாக்கினர் என புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதிமுக போராட்டம்
அதன் அடிப்படையில், ண்டோ மதிவாணன் மற்றும் அவரின் மனைவி மெர்லினா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சரணடையும் பட்சத்தில் சட்டப்படி அவர்களுக்கு ஜாமின் அளிக்க பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இதற்கிடையில், திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பட்டியலினப் பணிப்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் நீதிக் கோரி அதிமுக சார்பில் பிப்.1ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.