த.வெ.க. அரசு மீது அதிமுக அதிரடி குற்றச்சாட்டு : விழுப்புரத்தில் போராட்டம் அறிவிப்பு!

Vijay Tvs ADMK Edappadi K. Palaniswami TVK
By Vinoja Jun 12, 2026 01:47 PM GMT
Report

“விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; மேலும் தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்”

என தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19.06.2026 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

த.வெ.க. அரசு மீது அதிமுக அதிரடி குற்றச்சாட்டு : விழுப்புரத்தில் போராட்டம் அறிவிப்பு! | Aiadmk Protest Against Tvk Edappadi Palanisamy

அரசியலுக்கு வருகிறாரா ராகவா லாரன்ஸ்? ரசிகர்களிடம் நேரடியாக கேட்ட கேள்வி!

அரசியலுக்கு வருகிறாரா ராகவா லாரன்ஸ்? ரசிகர்களிடம் நேரடியாக கேட்ட கேள்வி!

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, 

நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடன்களில் 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது.

த.வெ.க. அரசு மீது அதிமுக அதிரடி குற்றச்சாட்டு : விழுப்புரத்தில் போராட்டம் அறிவிப்பு! | Aiadmk Protest Against Tvk Edappadi Palanisamy

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ.50,000/-க்குள் பெற்ற கடன்கள் மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், சிறு விவசாயிகளின் கடன்களுக்கு 50 சதவிகிதம் வரை மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்றும், 1 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.5,000/- மட்டும் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளது த.வெ.க. அரசு.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்யும் விஜய்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மூகாம்பிகை கோவிலில் தரிசனம் செய்யும் விஜய்

மேலும், தமிழகத்தில் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்படும் வகையில் நிலவி வரும் மின்வெட்டை சரிசெய்வதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமல், அர்த்தமற்ற காரணங்களை கூறி அரசு தப்பித்துக்கொள்வது மிகுந்த வேதனைக்குரியது.

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களை பல்வேறு வகைகளில் வஞ்சித்து ஏமாற்றி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.”என சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.