அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவு!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டம்
ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த பல்கலைகழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்குவது, சித்த மருத்துவ பல்கலைக்கழகங்களை உருவாக்குவது உள்ளிட்ட 10 மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு| மூலம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
முக்கிய முடிவு
செய்யாறு விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து பேரவையில் கேள்வியெழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, சபாநாயகரை சந்தித்து பேசியுள்ளார். சட்டப்பேரவையில் கேள்வியெழுப்ப அனுமதிக்கக்கோரி பேசியதாக கூறப்படுகிறது.