அதிமுக நிர்வாகிகளுடன் பாஜக ஆலோசனை
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக அதிக இடங்களை பெற தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு 3 மணிநேரம் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உடன் முதல்வர், துணை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்போது உடன்பாடு எட்டப்படாத நிலையில், பாஜக நிர்வாகிகள் 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பாஜக சார்பில் 30 தொகுதிகள் கேட்கபட்டதாகவும், ஆனால் அதிமுக சார்பில் 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil
116 வயதிலும் தளராத பக்தி... 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி! வைரலாகும் வீடியோ Manithan