அண்ணாமலை மாற்றத்திற்கு பின்தான் அதிமுகவுடன் கூட்டணியா? அமித் ஷா பதில்
அதிமுக-பாஜக கூட்டணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார்.
அதிமுக-பாஜக
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக தலைமையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் தான் கூட்டணி அமைகிறது.
யாருக்கு எத்தனை தொகுதி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான், ஆட்சியில் எங்களுடைய பங்கு என்னவாக இருக்கும் என்பதை பேசுவோம். தமிழகத்தில் இருந்து திமுகவை விரட்டியப்போம். 2026 சட்டமன்றத் தேர்தலை பாஜக மற்றும் அதிமுக இணைந்து சந்திக்கும்.
அமித் ஷா உறுதி
தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநிலத்தில் இபிஎஸ் தலைமையிலும் கூட்டணி. அதிமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இது இயல்பாக அமைந்த கூட்டணி. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிடப்போவதில்லை. இந்த கூட்டணி இருவருக்குமே பயனளிக்கக்கூடியது.
எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக உடன் கூட்டணி உறுதி செய்யப்படுகிறது, சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும். கூட்டணி குறித்து அதிமுக எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றத்திற்கு பின்தான் அதிமுகவுடன் கூட்டணி உறுதியானதா என்ற கேள்விக்கு, இன்றும் அண்ணாமலைதான் பாஜக மாநில தலைவர். இது இயல்பாக அமைந்த கூட்டணி என கூறி பரவிய வதந்திக்கு பதிலளித்துள்ளார்.