அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு - திருச்சி சிவாவிடம் ஒப்படைப்பு
அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி அவ்வபோது சர்ச்சையான கருத்துக்களை கூறி கண்டனத்திற்குள்ளாகிறார். மகளிர் விடியல் பயணம் தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி,
பேருந்தில் பெண்கள் ஓசியில் தானே போகிறீர்கள் என கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அந்த வரிசையில், விழுப்புரம் சித்தலம்பட்டி;ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மிக கீழ்த்தரமான மொழியில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பதவி பறிப்பு
குறிப்பாக சைவம் மற்றும் வைணம் குறித்து மோசமாக ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்த நிலையில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்படுகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொடர்ந்து கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த எம்.பி திருச்சி சிவாவிற்கு, துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.