ட்ரம்பை கைது செய்தால் இப்படிதான் இருக்கும் - வைரலாகும் ஃபோட்டோஸ்

Donald Trump United States of America
By Sumathi Mar 22, 2023 08:33 AM GMT
Report

ட்ரம்ப் கைது செய்யப்படுவது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் கைது

பாலியல் தொடர்பை மறைக்க அமெரிக்கா மாடல் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 1,30,000 டாலர் வழங்கி இருந்ததாக கூறப்பட்டது. இதனால் அவர் கைது செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகின.

ட்ரம்பை கைது செய்தால் இப்படிதான் இருக்கும் - வைரலாகும் ஃபோட்டோஸ் | Ai Predicts Donald Trump S Arrest Would Look Like

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வந்தார். இதற்காக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வைரல் ஃபோட்டோஸ்

இந்நிலையில், ட்ரம்ப் கைது செய்யப்பட்டால், அந்த நிகழ்வு எப்படியிருக்கும் என செயற்கை நுண்ணறிவு படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.

மேலும், அது தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்ததால் இணையவாசிகள் பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.