உங்கள் மரண தேதி தெரிய வேண்டுமா? துல்லியமாக கணிக்கும் ஏஐ
மனிதர்களின் மரண தேதியை கணிக்கும் ஏஐ செயலியை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
டெத் கிளாக் ஏஐ
செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது. மனிதர்கள் செய்யும் பல்வேறு வேலைகளை ஏஐ செய்வதால் வேலைவாய்ப்பை பறிக்கும் என அச்சமடைந்துள்ளனர்.
ஆனால் அதற்கு ஒரு படி மேலாக மனிதர்களால் செய்ய முடியாத செயல்களையும் செய்கிறது. டெத் கிளாக் என்ற ஏஐ மனிதர்கள் இறக்கும் தேதியை கணிக்கிறதாம்.
மரண தேதி
சாகுற நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என சொல்வார்கள். ஆனால் ஜூலை மாதம் வெளியான இந்த செயலி மூலம் தற்போது வரை 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்களது இறப்பு தேதியை தெரிந்துள்ளனர். காரணம் இத்தோடு மரணத்தை தள்ளிபோடுவதற்கான பரிந்துரைகளையும் வழங்கும்.
இதற்கு உங்கள் பிறந்த தேதி, பாலினம், எடை, உயரம், உணவுப்பழக்கம், இனம், வாழும் இடம், தூங்கும் நேரம், உடற்பயிற்சி, புகை புடிப்பீர்களா என அனைத்தையும் வழங்க வேண்டும். இதை வைத்து உங்கள் மரண தேதியை தீர்மானிக்கும். இதோடு மரணத்தை தள்ளிபோடுவதற்கான பரிந்துரைகளையும் வழங்கும்.
மேலும், உடல் எடை அதிகமாக இருந்தால் அதனைக் குறைக்க அறிவுறுத்துவது, உடற்பயிற்சி செய்யச் சொல்வது, சிகரெட் பிடிப்பதால் ஆயுள்காலம் எவ்வளவு குறைகிறது என காட்டுவது, எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், என்ன உணவு எடுத்துக்கொள்ள வேண்டும், மன அழுத்தத்தை குறைக்கதனிமையை தவிர்க்க வேண்டும், போன்ற பரிந்துரைகளை வழங்குகிறது. அதன்படி செய்தால் நம் ஆயுட்காலம் அதிகரிப்பது போல் காட்டுகிறது.