2000 ரூபாய் நோட்டுகள் இங்கு வாங்கப்படும் - ரெஸ்டாரண்ட்டில் முண்டியடித்த மக்கள்!

Gujarat
By Sumathi Jul 03, 2023 05:39 AM GMT
Report

உணவகம் ஒன்று 2000 ரூபாய் நோட்டுக்கள் வாங்கப்படும் என அறிவித்த சம்பவம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

2000 ரூபாய்

2 ஆயிரம் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் வங்கிகளில் இதனை மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த்து. அதனை தொடர்ந்து, குஜராத் நினி கிச்சன் என்னும் ரெஸ்டாரண்ட் சார்பில் விளம்பரம் ஒன்று வெளியாகியிருந்தது.

2000 ரூபாய் நோட்டுகள் இங்கு வாங்கப்படும் - ரெஸ்டாரண்ட்டில் முண்டியடித்த மக்கள்! | Ahmedabad Restaurant Accepting 2000 Rupees Note

தங்கள் ரெஸ்டாரண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து, ரெஸ்டாரண்ட் உரிமையாளர் அன்கித் குப்தா பேசுகையில், “2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஏற்கப்படும் என்ற விளம்பரத்தை இதற்கு முன்பு ஜூன் 4ஆம் தேதி வெளியிட்டிருந்தோம்.

வைரல் விளம்பரம்

அப்போது முதல் எங்கள் ரெஸ்டாரண்டிற்கு வாடிக்கையாளர்களின் வருகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. யூபிஐ ஆன்லைன் பரிவர்த்தனை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே ரெஸ்டாரண்டில் ரொக்கப் பரிவர்த்தனை குறைந்திருந்தது.

2000 ரூபாய் நோட்டுகள் இங்கு வாங்கப்படும் - ரெஸ்டாரண்ட்டில் முண்டியடித்த மக்கள்! | Ahmedabad Restaurant Accepting 2000 Rupees Note

ஆனால், இந்த 2 ஆயிரம் நோட்டு ஏற்கப்படும் என்ற விளம்பரத்தால் ரொக்கப் பரிவர்த்தனை 20 முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு மக்கள் கூட்டல் அலைமோதியது.