இறந்ததாக நினைத்து எரிக்கப்பட்ட நபர் - இரங்கல் கூட்டத்திற்கு உயிரோடு வந்ததால் அதிர்ந்த உறவினர்கள்

Missing Persons Gujarat Death
By Karthikraja Nov 19, 2024 08:00 AM GMT
Report

இறந்ததாக நினைத்து எரிக்கப்பட்ட நபர் 5 நாள் கழித்து இரங்கல் கூட்டத்திற்கு உயிரோடு வந்தபோது உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொலைந்த மகன்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ் சுதார் (43). நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த அக்டோபர் 27ஆம் தேதி காணாமல் போயுள்ளார். 

ahmedabad man alive

இதனையடுத்து அவரது தாயார் காணாமல் போன தன் மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு நரோடா காவல் நிலையத்தில், நவம்பர் 6 ஆம் தேதி புகாரளித்தார். 

மனைவியை கொன்றதாக சிறையில் இருந்த கணவர் - 4 ஆண்டுக்கு பின் உயிரோடு வந்த மனைவி

மனைவியை கொன்றதாக சிறையில் இருந்த கணவர் - 4 ஆண்டுக்கு பின் உயிரோடு வந்த மனைவி

உடல் தகனம்

அதன்பின் சபர்மதி நதியில் சிதைந்த நிலையில் ஒரு உடல் மிதந்துள்ளது, யார் என அடையாளம் காண்பதற்கான அந்த உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து பிரிஜேஷின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ahmedabad death man alive

அடையாளம் தெரியாத உடல், பிரிஜேஸ் சுதரின் உடல்தான் என பிரிஜேசின் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த உடலானது பிரிஜேசின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நவம்பர் 10 ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.

உயிரோடு வந்ததால் அதிர்ச்சி

இந்நிலையில் நவம்பர் 14 ஆம் தேதி பிரிஜேஸ் சுதரின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பிரிஜேஸ் வீட்டிற்கு வந்தார். இறந்ததாக கருதி தகனம் செய்யப்பட்ட பிரிஜேஸ் நேரில் வந்ததை கண்டு, உறவினர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

தற்போது காணாமல் போனவர் திரும்பி வந்துள்ள நிலையில் அந்த வழக்கை முடித்து வைத்த காவல்துறையினர் பிரிஜேஸ் என நினைத்து தகனம் செய்யப்பட்ட உடல் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.